பழுப்பு அரிசி  என்பது தூய்மை படுத்தபடாத, பளபளப்பு இல்லாத ஒரு   முழு தானியம் ஆகும். நெல்லின் மேல் தோலை நீக்குவதன் மூலம் உற்பத்தி  செய்யப்படுகிறது. பழுப்பு அரிசியானது சத்துக்கள் மிக்க தவிடு மற்றும் உள் அடுக்கை  தக்கவைத்து கொண்டிருக்கும். வெள்ளை அரிசியை ஒப்பிடும்போது நன்கு மெல்லும் தன்மை  கொண்டும், வாசனையையும் உடையது.    
                  
 பழுப்பு அரிசி  ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கிய இதய நாள அமைப்பு, செரிமான அமைப்பு மூளை மற்றும்  நரம்பு அமைப்புகளை சிறப்பாக செயல்பட வைக்கிறது. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற  அமைப்பு, பல வகையான உபாதைகளான உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற கொழுப்பு,  அழுத்தம், மன அழுத்தம் மற்றும் தோல் நோய்களிலிருந்து நிவாரணம் அடைய உதவுகிறது.  பழுப்பு அரிசியில் உள்ள உயர் சத்துக்கள் பல வகையான மருத்துவ நோய்கள் புற்றுநோய்,  அதிக எடை, நீரழிவு நோய், நரம்பு சிதைவுகள் மற்றும் மறதியை குணப்படுத்தும் என்று  நிருபிக்கப்படுகிறது. இது மன அழுத்ததிற்கு எதிராகவும், ஆரோக்கியமான வலுவான எலும்பு  மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உடையது.   |